கோவையில் நடிகர் விஜய் சேதுபதியின் சேவை இயக்கம் சார்பில் டிச.2,3,4 தேதிகளில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

கோவையில் நடிகர் விஜய் சேதுபதி சார்பில் வரும் டிசம்பர் 2,3,4 ஆகிய தேதிகளில் இளைஞர்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: நடிகர் விஜய் சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் மற்றும் KGISL கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மூன்று நாட்கள் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் டிசம்பர் 2,3,4 ஆகிய தேதிகளில் கோவை மாநகரில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 22 துறைகளை சேர்ந்த, 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. 20 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்க உதவுவதே இந்த வேலை வாய்ப்பு முகாமின் நோக்கமாக உள்ளது.

வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் இளைஞர்கள் http://jobfair.vvvsi.com எனும் இணையத்தளத்தில் பதிவு செய்து வேலை வாய்ப்பை பெற்று பயன்பெறலாம் என்றும்எந்த கட்டணமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை நடிகர் விஜய் சேதுபதியின் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் சார்பில்புதுச்சேரியில் நடைபெற்ற மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் 50 நிறுவனங்கள் பங்கேற்றதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இதுவரை நடிகர் விஜய் சேதுபதியின் சேவை இயக்கம் மூலம் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...