டெஸ்ட் பர்சேஸ் நடைமுறையில் விலக்கு அளிக்க நீலகிரி மாவட்ட வணிகர் சங்கம் கோரிக்கை

டெஸ்ட் பர்சேஸ் என்ற நடைமுறையை 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்கக்கோரியும், அதில் இருந்து சிறு குறு வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும் நீலகிரி மாவட்ட வணிகர் சங்கம் சார்பில், மாவட்ட வணிக வரி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.



நீலகிரி: தமிழகம் முழுவதும் வணிகவரித்துறை சார்பில் சில்லறை விற்பனை கடைகளில் டெஸ்ட் பர்சேஸ் என்னும் புதிய நடைமுறை மற்றும் சரக்கு வாகன தணிக்கை முறை அமலுக்கு வந்துள்ளது.



இந்த புதிய நடைமுறையால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு குறு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த முறையிலிருந்து சிறு குறு வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்க கோரி இன்று அனைத்து மாவட்டங்களிலும் வணிகர் சங்கத்தினர் அந்தந்த மாவட்ட வணிக வரித்துறை அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



அதன் படி, நீலகிரி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக மாவட்ட தலைவர் பரமேஷ்வரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வணிகர்கள் உதகையில் உள்ள மாவட்ட வணிக வரி அலுவலரை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட தலைவர் பரமேஷ்வரன் பேசியதாவது:

டெஸ்ட் பர்சேஸ் முறை என்பது ஆண்டிற்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் முதலாளிகளுக்கு விதிக்க வேண்டும் என்றும் ஆனால் சிறு, குறு வியாபாரிகளுக்கு விதிப்பதால் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

மேலும் டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரில் கடைகளில் சோதனை நடத்தி 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதாகவும் இந்த புதிய நடைமுறை தொடர்பான விழிப்புணர்வு வணிகர்களிடையே ஏற்படும் வரை 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் பரமேஷ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...