வளர்ப்பு பன்றிகளை எடுத்து வர கேரள அரசு தடை - கோவையில் தமிழக பன்றி பன்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் இருந்து வளர்ப்பு பன்றியை எடுத்து வர செல்ல கேரள அரசு விதித்துள்ள தடை உத்தரவை கண்டித்து தமிழக பன்றி பன்னை விவசாயிகள் கோவை எட்டிமடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் பன்றி பன்னைகள் உள்ளன. தமிழகத்தில் இருந்து வழக்கமாக அதிகளவு பன்றிகள் கேளராவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் பன்றிகள் தரமாக உள்ளதால், அவை எம்.பி.ஐ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு 44 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பன்றிகள் கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளா செல்லும் பன்றிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை அம்மாநில தன்னார்வ அமைப்புகள் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்து வருகின்றனர்.



இதனால் கடந்த 6 மாதங்களால் கேரளாவிற்கு பன்றிகள் ஏற்றுமதி செய்யாததால் சுமார் 200 டன் பன்றிகள் பன்னைகளிலேயே தேங்கியுள்ளதாகவும் இதனால் பல கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக பன்றி பன்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.



எனவே கேரள அரசு தடை உத்தரவை திரும்ப பெறக்கோரி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பன்றி பன்னை விவசாயிகள் தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள எட்டிமடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கி வருவதால் என்பதால் வெளிநாடுகளுக்கு செல்லும் ஏற்றுமதி தடையாகியுள்ளதாகவும், உடனடியாக கேரளா அரசு தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பன்றிகள் கொண்டு செல்ல போடப்பட்ட தற்காலிக தடையை நீக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.



தமிழக அரசு இது குறித்து கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், மத்திய அரசின் தரசான்றிதழான எம்.பி.ஐ வழங்கி தமிழகத்திலும் அந்த நிறுவனங்கள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...