கோவை கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ தார்சாலை அமைக்கும்‌ பணிகள் - மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ தார்சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மேயா்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வாடு எண்‌.24-க்குட்பட்ட கொடீசியா சாலை முதல்‌ தண்ணீர்பந்தல்‌ சாலை வரை தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள்‌ உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ்‌ ஆயிரத்து 470 மீட்டர் தொலைவிற்கு தார்சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அந்த பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு, பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்‌.



மேலும்‌, சாலையின்‌ நீளம்‌, அகலத்தினை பொறியாளர்கள் மூலம்‌ அளவீடு செய்வதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர், தார்சாலையின்‌ தரத்தை உறுதி செய்திட அதன்‌ மாதிரியினை ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்திடவும்‌ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, துணை மேயர்‌ வெற்றிசெல்வன்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ஷர்மிளா, மாமன்ற உறுப்பினர்‌ பூபதி மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...