கோவையில் 19 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.இராஜா வழங்கினார்

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு சுயதொழில் தொடங்க ரூ.10 இலட்சம் மானியம், 3 பயனாளிகளுக்கு வாகனங்கள் வாங்க ரூ. 5.05 இலட்சம் மானியம் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசுத்துறைகளின் தணிக்கைப் பத்திகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவரும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர்.இராஜா தலைமையில் நடைபெற்றது.

இதில், குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், அருண்மொழிதேவன், கிருஷ்ணசாமி, A.K.செல்வராஜ், R.D.சேகர், தமிழரசி, SS.பாலாஜி, முன்னிலை வகித்தனர்.



பின்னர், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.இராஜா வழங்கினார்.

அதன்படி, சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் 3 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள் வருவாய்த்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு மின்மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் தாட்கோ சார்பில் 3 பயனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க ரூ.5.74 இலட்சம் மானியம் வழங்கப்பட்டது.

4 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு சுயதொழில் தொடங்க ரூ.10 இலட்சம் மானியம், 3 பயனாளிகளுக்கு வாகனங்கள் வாங்க ரூ. 5.05 இலட்சம் மானியம் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர், எஸ்.ஆர்.இராஜா வழங்கினார்.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன், சட்டப்பேரவை செயலர் முனைவர் கே.சீனிவாசன், இணைச் செயலாளர் சிமன்பாண்டியன், செயல் இயக்குணர் (சிப்காட்) டைடல் பார்க் மேலாண் இயக்குனர் நிஷாந்த் கிருஷ்ணா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இன்று காலை சுங்கம் போக்குவரத்து பணிமனை, சிட்கோ, பீளமேடு தொழில்நுட்ப பூங்கா உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர், எஸ்.ஆர்.இராஜா தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...