கோவை அரசு மருத்துவமனை காவலாளிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தன்னை தாக்கியதாக ஆட்சியர் அலுவலகத்தில் பெண் புகார்

காந்திமாநகர் ஹட்கோ காலனியை சேர்ந்த பெண் ஒருவர் கோவை அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு மருத்துவமனை காவலாளிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அவரை வெளியே செல்லுமாறு தாக்கியதாக புகார் அளித்துள்ளார்.



கோவை: கோவை காந்திமாநகர் ஹட்கோ காலனி பகுதியைச் சேர்ந்தவர் கற்பகவல்லி. இவருடைய தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு கை, கால் வீக்கம் உட்பட பல்வேறு உடல் உபாதைகள் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதற்காக, இவர் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வருட காலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும், இதய பிரச்சினை சம்பந்தமாகவும் மருத்துவமனைலேயே தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.

இவ்வாறு அவ்வப்போது பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வழக்கம் போல சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த கற்பகவல்லி இரவு அங்கேயே தங்கி உள்ளார்.



அப்போது, இரவு நேரத்தில் பணியாற்றும் காவலாளிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஒன்று சேர்ந்து உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியே செல்லுமாறு தன்னை வற்புறுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியே செல்ல மறுப்பு தெரிவித்த போது, அங்கு பணியில் இருந்த காவலாளிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தன்னை அடித்து ஆடைகளை கிழித்து உடைமைகளை வெளியே தூக்கி எறிந்து பிரச்சனை செய்ததாக அப்பெண் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.



பின்னர், தான் மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் முறையிட்ட போது, அவர்களும் தன்னை உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியே செல்லுமாறு நிர்ப்பந்தித்ததாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...