திருப்பூரில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி - உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்..!

எம்.எம்.எஸ். அரண்மனைபுதூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளில், மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட எம்.எம்.எஸ். அரண்மனைபுதூரில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் நேற்றைய தினம் பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்நடைபெற்றது.



இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், பொட்டேட்டோ கேதரிங், கலெக்டிங் தி பால்ஸ், பலூன் ஊதுதல், தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.



இந்த போட்டிகளில் 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த போட்டிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

இந்த விளையாட்டுப் போட்டிகளை திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி துவக்கி வைத்தார்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...