கோவை பெரியநாயக்கன் பாளையம் ஒன்றிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டம் - முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை..!

கோவை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பெரியநாயக்கன் பாளையம் ஒன்றிய அளவிலான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.


கோவை: கோவை மேற்குபெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்டகொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பன்னீர்மடை பகுதியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை கோயில் மண்டபத்தில் கடந்த 27 ஆம் தேதி மாலை 06.30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை பொருளாளர் சண்முகக் கவுண்டர் மற்றும் முன்னாள் பொருளாளர் முருகேச கவுண்டர் ஆகியோர் தலைமைதாங்கினர்.



இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் M.S.மணி மற்றும் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா மற்றும் ஒன்றிய செயலாளர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய பொறுப்பாளர்கள் தங்கவேல், P.M.இங்கோவன், ஜெகநாதன், மாணிக்க வாசகம் மற்றும் பன்னீர்மடை ஊராட்சி செயலாளர் சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிப் பணிகள், விரைவில் நடைபெற இருக்கும் கொடியேற்று விழா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் ஒன்றிய துணை செயலாளர் பொன்னுசாமி இறுதியாக நன்றியுரை கூறினார். மேலும் மாவட்ட, ஒன்றிய, நகர , பன்னீர்மடை ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் அணி, தீரன் படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பலரும்ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.





Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...