உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் 16 குழந்தைகளுக்கு தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன..!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில், தங்க நாணயம் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.



இதனையொட்டி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி,நவம்பர் 27ஆம் தேதி திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில்பிறந்த16 குழந்தைகளுக்குதங்க நாணயம், ரூ.2000 மதிப்புள்ள ஆடைகள் மற்றும் குழந்தைகளுக்கான பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.



திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,திருப்பூர் மாநகர மேயர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் நாகராஜ், மருத்துவமனை டீன் முருகேசன் ஆகியோர்கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க நாணயம் மற்றும் பரிசுகளை வழங்கினர்.



இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ராமதாஸ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர் ராஜு, தம்பி குமாரசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...