நீலகிரி முதுமலையில் புலி தாக்கி வேட்டை தடுப்பு காவலர் படுகாயம் - அச்சத்தில் பொதுமக்கள்..!

முதுமலை வனச்சரக வேட்டை தடுப்பு காவலர் பொம்மனை புலி தாக்கிய நிலையில், உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு அந்த புலியை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் உள்ள தெப்பக்காடு பகுதியை சேர்ந்தவர் பொம்மன்(33). இவர் முதுமலை வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் விடுமுறையில் இன்று தெப்பகாடு லைட் பாடியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்ற போது குடியிருப்பை ஓட்டி புதரில் பதுங்கி இருந்த புலி அவரை தாக்கியுள்ளது.



இதில் தலை, முதுகு மற்றும் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பொம்மன் புலியை தைரியமாக எதிர்த்து நின்று சண்டையிட்டதால் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.



இதையடுத்து சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொம்மனை தாக்கிய புலி வயதான புலி என்றும் கடந்த சில நாட்களாக தெப்பக்காடு பகுதியில் சுற்றித்திரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக உயிரிழப்பு ஏற்படும் முன்பு உடனடியாக அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள், வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...