கோவை பன்னிமடை, சின்னதடாகம் பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் - பொதுமக்கள் அச்சம்..!

கோவை பன்னிமடையை அடுத்த தாளியூரில் புகுந்த ஒற்றை யானை தென்னை மரங்களை பிடுங்கி எறிந்து சேதப்படுத்தியுள்ள நிலையில், சின்னதடாகத்தில் புகுந்த 3 யானைகள், பொதுமக்களை அச்சுறுத்திய நிலையில் வனத்துறையினர் விரட்டினர்.


கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகேயுள்ள மாங்கரை மலைப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும்தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

இதனிடையே தடாகம் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஒற்றையாகவோ அல்லது கூட்டமாகவோ வரும் காட்டு யானைகள் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில்பன்னிமடையை அடுத்த தாளியூர் பகுதியில் நேற்று இரவு வந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த மருதாசலம் என்பவரதுதோட்டத்திற்குள் புகுந்துள்ளது. தோட்டத்தில் புகுந்த காட்டு யானை அங்கிருந்த 5 ஆண்டுகள் ஆன தென்னை மரங்களை வேரோடு பிடிங்கி தின்றுவிட்டு சென்றுள்ளது.

இதேபோல் கோவை சின்னதடாகம் அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள சவுடாம்பிகா நகர் பகுதிக்குள் நேற்றிரவு 3 காட்டு யானைகள் புகுந்துள்ளன.

இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் கோவை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதனையடுத்து, வனத்துறை ஊழியர்கள் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். அப்போது, டார்ச் லைட் அடித்து யானைகளை விரட்டும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இதேபோல் அடிக்கடி யானைகள் குடியுருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்துவதால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...