தனியார் வங்கி, நிதி நிறுவனங்களை கண்டித்து கோவையில் சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்..!

கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், கடன் தொகையை செலுத்த தவறினால், அடியாட்களை வைத்து மிரட்டுவது, ஆட்டோவை தூக்குவது போன்ற செயல்களை தடுக்க வேண்டும்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டு தனியார் வங்கி, மற்றும் நிதி நிறுவனங்கள் அதிகப்படியான அபராதங்களை வசூலிப்பதாக குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா காலங்களில் EMI தொகையை வசூலிக்க வேண்டும். கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலை என எட்டு மாதங்களில் நான்கு மாதங்களையாவது தள்ளுபடி செய்ய வேண்டும்.

தனியார் வங்கி மற்றும் கடன் நிறுவனங்கள் 47 மாதம் கட்ட வேண்டிய நிலுவை தொகைக்கு 64 மாதமாக கட்ட சொல்லி வலியுறுத்துகின்றன. 13.5% வட்டியை 24.24% கட்ட வேண்டும் என நிர்பந்திக்கின்றன. கடன் தொகையை செலுத்த தவறினால் ஒரிரு நாள் தாமதமாக கட்டினாலோ ஆபாச வார்த்தைகளில் பேசுகின்றனர்.

அடியாட்களை வைத்து மிரட்டுவது, ஆட்டோவை தூக்குவது போன்ற செயல்களில் தனியார் நிதி நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தனியார் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...