கோவை மணியகாரம்பாளையம் அருகே பொதுச் சாலை ஆக்கிரமிப்பை போலீசார் உதவியுடன் அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்..!

கணபதி அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் பொதுச் சாலையை இருபுறமும் கேட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்ததை குழாய் பதிக்கும் பணிக்காக ஜேசிபி மூலம் காவல்துறை உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.



கோவை: கோவை மாவட்டம் கணபதி அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் சீனிவாசா நகர் செல்லும் சாலையோரத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.



இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் கோவை மாநகராட்சி நகர்ப்புற மேம்பாட்டு அலுவலர் விமலா தலைமையில் அதிகாரிகள் குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



அப்போது அப்பகுதியில் இருந்த ஒரு புதிய குடியிருப்பு வழியாக சென்ற சாலையை ஆக்கிரமித்து கேட் அமைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அவ்வழியாக குழாய்களைக் கொண்டு செல்வதற்கு குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



இதனையடுத்து உடனடியாக சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.



இந்நிலையில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கேட்களை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்ற முயற்சித்தனர்.



இதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, உடனடியாக அகற்ற வேண்டாம், கால அவகாசம் கொடுங்கள் என மாநகராட்சி அலுவலரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.



இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர், முதல்வர் தனிப்பிரிவு ஆகியோருக்கு தகவல் அனுப்பி உள்ளதாகவும் அதற்கு பதில் கிடைத்த பின் மாநகராட்சி பணி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.



இந்நிலையில், மாநகராட்சி அதிகாரியின் உத்தரவின் பேரில் இருபுறமும் இருந்த கேட்டுகள் அகற்றப்பட்டன. குழாய் பதிக்கும் பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கும் என கூறிவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.



இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...