நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.50,000 அபராதம் - மாவட்ட நிர்வாகம் அதிரடி..!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி தலைமையிலான அதிகாரிகள் நடத்திய சோதனையில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.50,000 அபராதம் விதித்து அதிரடி.


நீலகிரி: தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள்,

பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

இதனை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.



இந்த ஆய்வில் ஹோட்டல், பேக்கரி, உணவகங்கள், வணிக வளாகங்கள், மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தடை செய்யப்ட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என கண்காணிக்கப்படுகிறது.



இந்நிலையில், உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆய்வில், பல்வேறு கடைகளில் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டு இருந்த ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து அந்த கடைகளுக்கு ரூ.50,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...