கோவை வடவள்ளியில் வீடு புகுந்து கொள்ளை: கார், நகை, பணம் மீட்பு; இருவர் கைது..!

கடந்த 28 ஆம் தேதி வடவள்ளியில் வீடு புகுந்து நகை, பணம், கார் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இருவரை கைது செய்த போலீசார், 17.25 சவரன் நகைகள், ரூ.1.85 லட்சம் பணம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (49). அதே பகுதியில் உள்ள மாதவன் நகரில் தனது மனைவி மகேஸ்வரி உடன் பெரியசாமி வசித்து வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 28 ஆம் தேதி பெரியசாமி வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி முன்பக்க கதவை அடைத்து விட்டு குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, அவர் மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை அடையாளம் தெரியாத நபர்கள் எடுத்துச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக அவர் தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வீட்டுக்கு வந்த கணவரிடம் நடந்ததை மகேஸ்வரி கூறியதை அடுத்து, கொள்ளைச் சம்பவம் குறித்து பெரியசாமி வடவள்ளி காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை வழக்குப்பதிவு செய்து வழக்கை விசாரித்து வந்தார். தொடர்ந்து, அவர்களது வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது, வடவள்ளி பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (23) மற்றும் மதுரை மாவட்டத்தைச் முத்துசுருளி (35) என்பது தெரியவந்தது

இதனையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், வீடு புகுந்து கொள்ளை அடித்த 17.25 சவரன் தங்க நகைகள், ரூ.1,85,000 ரொக்கம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

இக்கொள்ள சம்பவத்தை அடுத்து, வீட்டில் தனியாக இருப்பவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தின் தொலைபேசி எண்கள் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறையின் எண் போன்ற எண்களை தவறாது வைத்திருக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...