திருப்பூர் பல்லடத்தில் தனியார் கழிவு பஞ்சு அரவை ஆலையில் திடீர் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின..!

பல்லடம் அடுத்த பூமலூரில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு அரவை ஆலையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்திய நிலையில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகின.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சமீம். இவருக்கு சொந்தமான கழிவு பஞ்சு அரவை ஆலை பூமலூர் வண்ணந்தோட்டம் பகுதியில் இயங்கி வருகிறது. இதில் வட மாநில தொழிலாளர்கள் உட்பட 50 மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு தொழிலாளர்கள் சிலர் பணியில் இருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பஞ்சு மூட்டைகளில் தீ மளமளவென பரவிய நிலையில், தொழிலாளர்கள் அங்கிருந்து பத்திரமாக தப்பிச் சென்றுள்ளனர்.



இதையடுத்து தீ விபத்து குறித்து பல்லடம் தீயணைப்பு துறையினர் மற்றும் மங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 5 தண்ணீர் லாரிகள் மற்றும் ஜேசிபி உதவியுடன் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் மற்றும் கட்டிடங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்திற்கு மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...