அருந்ததியர் சமூக மக்களின் இலவச வீட்டு மனை கோரிக்கை - முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றப்படும் என இருகூர் பேரூராட்சி தலைவர் உறுதி

சூலூர் அடுத்த இருகூர் பேரூராட்சி தலைவர் சந்திரனிடம் ராவத்தூர் பகுதி அருந்ததியர் சமூகத்தினர் மனு அளித்த நிலையில், முதலமைச்சர் மற்றும் பொறுப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அடுத்த இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராவத்தூர் பகுதி அருந்ததியர் சமூக மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



இந்நிலையில், கோட்டை முதல் கொத்தளம் வரை மனுக்கள் கொடுத்தும் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளதாக இருகூர் பேரூராட்சி தலைவர் ஆ.சந்திரனிடம் மனு அளித்தனர்.

அப்போது, இருகூர் பேருராட்சி தலைவர் ஆ.சந்திரன் முதலமைச்சர் மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அருந்ததியர் சமூக மக்களின் 10 ஆண்டு கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.



இந்த நிகழ்வின் போது, மன்ற உறுப்பினர் நதியா ரவிச்சந்திரன் மற்றும் மக்கள் வழிகாட்டி இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் மயில்சாமி, மற்றும் கோவை மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...