உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி கோவையில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு பேரணி - 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, கோவையில் மாற்றுத்திறனாளிகள் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.



கோவை: ஒவ்வோரு ஆண்டும் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மாற்று திறனாளிகள், சம உரிமை, வாய்ப்புகளுடன் வாழ்வதற்கு ஏற்ற சூழலை அமைத்து, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்க சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் இந்நாளில், மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை அங்கீகரித்து விருதுகளும் வழங்கப்படும்.

அதன்படி, இன்று கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் மற்றும் கோவை மாவட்ட அனைத்து வகை மகளிர் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் இணைந்து சமூக விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

இந்த பேரணியானது, மாற்றுத்திறனாளிகள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்துதல், அனைத்து வகையான தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தள வசதி, சக்கர நாற்காலி வசதி, மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வரக்கூடிய வசதிகளை ஏற்படுத்துதல், ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை நடைபெற்ற இந்த பேரணியை கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் வசந்த ராம் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இதில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அவர்களது வாகனங்களிலும் 50க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் நடைபயணமாகவும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

மேலும் யங் இந்தியன் அமைப்பினர், ரோட்டரி கிளப் ஆஃப் கோயமுத்தூர், ரோட்டரி கிளப் ஆஃப் அக்ருதி, ரோட்டரி கிளப் ஆஃப் காஸ்மோபொலிடன் உட்பட பல்வேறு NGO அமைப்பினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு ஜோதியானது, யங் இந்தியன் அமைப்பினரிடம் வழங்கப்பட்டது. பேரணியின் இறுதியில் மாற்றுத்திறனாளிகள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...