வேலை தேடி கோவைக்கு வந்தவர்களை அரிவாளால் தாக்கி செல்போன், பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பண்ருட்டியில் இருந்து கோவைக்கு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வந்த 2 பொறியாளர்களை மர்ம நபர்கள் நால்வர் வழிமறித்து அரிவாளால் தாக்கி செல்போன் மற்றும் ரூ.3,000 பணம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.



கோவை: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் பூபதி (22), வீரபாண்டி (24). இவர்கள் 2 பேரும் சரவணம்பட்டியில் தனியார் கல்வி நிறுவனத்தில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்வதற்காக வந்துள்ளனர்.

இருவரும் 1.15 மணியளவில் பண்ருட்டியில் இருந்து கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு வந்து இறங்கியுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஆவாரம்பாளையத்தில் உள்ள நண்பரின் அறைக்கு நடந்து சென்றுள்ளனர்.

பாரதியார் சாலை தனியார் மருத்துவமனை அருகே சென்ற போது 4 பேர் கொண்ட கும்பல் திடீரென வழிமறித்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் சேர்ந்து பூபதி, வீரபாண்டி ஆகியோரை அரிவாளால் தாக்கி விட்டு, அவர்களிடம் இருந்த 2 செல்போன்கள், ரூ.3,000 பணத்தை பறித்துக் கொண்டு, தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் காயமடைந்த 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காட்டூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...