வெள்ளக்கிணறு சமத்துவபுரத்தில் நடைபெற்று வரும் வீடுகள் புனரமைப்பு பணிகளை அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் செந்தில் பாலாஜி ஆய்வு..!

தமிழக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கோவை வெள்ளக்கிணறு சமத்துவபுரம் பகுதியில், பழுதடைந்துள்ள 100 க்கும் மேற்பட்ட வீடுகள் ரூ.77.05 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.


கோவை: கோவை வெள்ளக்கிணறு சமத்துவபுரம் பகுதியில் பழுதடைந்துள்ள 100 க்கும் மேற்பட்ட வீடுகளை புனரமைக்கும் பணிகள் ரூ.77.05 லட்சம் செலவில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகளை தமிழக ஊரக வளர்ச்சி அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர், சமத்துவபுரத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர்கள், நூலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். பின்னர், அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சமத்துவபுரம் திட்டம் புத்துயிர் பெறும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, மாவட்ட கலெக்டர் சமீரன், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறு குட்டி, முன்னாள் எம்.பி. நாகராஜ் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.



இதன் பின்னர், சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளக்கிணறு பகுதியில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் புனரமைக்கும் பணி, அரசூரில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தானியங்கி கேட் வால்வு மூலம் இயங்கும் மேல்நிலை நீர்த்தக தொட்டியை அமைச்சர்கள் பெரிய கருப்பன், செந்தில் பாலாஜி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



பின்னர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் முதலீடு நிதி மற்றும் நலிவு விலை குறைப்பு நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் 23 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.14.50 லட்சம் நிதி வழங்கினர்.

பின்னர், பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் ரூ.70.5 லட்ச மதிப்பீட்டில் 86 வீடுகள், பெரியார் சிலை சமுதாய நலக்கூடம், அங்கன்வாடி கட்டிடம், நியாய விலை கடை கட்டிடம், சாலை ஆகியவற்றை புனரமைக்கும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, கோவை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மதி அங்காடியினை திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில், அரசு முதன்மைச் செயலாளர் அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் டாக்டர் தரேஸ் அ கமது, ஊரக வாழ்வாதார இயக்க மேலாண் இயக்குனர் திவ்யதர்ஷினி, கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...