கோவையில் காவல் உதவி ஆய்வாளர் போல வேடமிட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்ட நபர் கைது…!

ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்த செல்வம், உதவி ஆய்வாளர் போல் போலியாக சீருடை அணிந்து கொண்டு கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியில் வாகன தணிக்கை செய்வது போல் மக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்து வந்தது தெரியவந்தது.


கோவை: கோவை கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான ஜான்சன் கல்லூரி அருகே உள்ள சர்வீஸ் சாலையில் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

அப்போது, அவரை நிறுத்திய காவல்துறை உடையில் இருந்த ஒரு நபர், தான் உதவி ஆய்வாளர் என்று கூறி சோதனை செய்துள்ளார். அப்போது, அவர் மீது சசிகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், காவல் நிலையத்திற்கு வந்து இது குறித்து தகவல் அளித்துள்ளார்.



இதையடுத்து, கருமத்தம்பட்டி உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ரோந்து சென்று பார்த்த போது, புல்லட் வாகனத்தில் உதவி ஆய்வாளர் சீருடையில் வந்த நபரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.

அப்போது, அவர் போலி உதவி ஆய்வாளர் என்பது தெரியவந்தது.

விசாரணையில், அவர் விருதுநகர் மாவட்டம் திம்மன்பட்டியை சேர்ந்த சேர்ந்த செல்வம் (39) என்பதும், தற்சமயம் கருமத்தம்பட்டியில் தங்கி தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்ததும், தொடர் விசாரணையில், செல்வம் உதவி ஆய்வாளர் போல் போலியாக சீருடை அணிந்து கொண்டு கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியில் வாகன தணிக்கை செய்வது போல் மக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்து வந்தது தெரியவந்தது.

மேலும் உதவி ஆய்வாளர் எனக் கூறி ஒரு பெண்ணை திருமணம் செய்ததோடு, தான் தற்போது தங்கியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளரிடமும் போலீஸ் எனக் கூறி ஏமாற்றி வந்துள்ளார். மில்லுக்கு வேலைக்கு செல்லும் போது மட்டும் உடையை மாற்றிக் கொண்டு சென்றுள்ளார்.

இதையடுத்து, செல்வத்தை அழைத்துச் சென்ற போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...