காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக கோவையிலிருந்து 8-வது ரயில் இன்று அதிகாலை புறப்பட்டது

காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம், பண்பாடு மற்றும் கலாச்சாரத் தொடர்பை வலுப்படுத்தும் வகையில், மத்திய அரசு துவங்கியுள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான 8வது ரயில் சேவை கோவையில் இருந்து இன்று அதிகாலை தொடங்கியது.


கோவை: காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சிக்காக 8வது ரயில் சேவை கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று அதிகாலை துவங்கப்படுவதையடுத்து, ரயில்வே மற்றும் மாநகர காவல்துறையினர் என 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 98 பயணிகள் கோவை ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தங்களது பயணத்தை துவங்கினர்.



இக்குழுவில், மாணவர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், வியாபாரிகள், தொழில்முனைவோர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளை பாஜகவின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில், அக்கட்சியினர் வழி அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...