அன்னூர் தொழில் பூங்கா: எங்கள் நிலங்களை காப்பாற்றுங்கள் விநாயகரே...! - கோவை புலியகுளம் கோவிலுக்கு மனு அளிக்க விவசாயிகள் நடைபயணம்

அன்னூரில் தொழில்பூங்கா (சிப்காட்) அமைப்பதற்காக சுமார் 3000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருவதை கண்டித்து, அதிகாரிகளிடம் மனு அளித்து பயனில்லை என்பதால் புலியகுளம் விநாயகரிடம் மனு அளிக்க விவசாயிகள் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.


கோவை: அன்னூரில் அமையவுள்ள தொழில் பூங்காவிற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை புலியகுளம் விநாயகருக்கு மனு கொடுக்க நடைபயணம் மேற்கொண்டுள்ள விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அன்னூரில் தொழில்பூங்கா (சிப்காட்) அமைப்பதற்காக சுமார் 3000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில், தொழில்பூங்காவிற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் விவசாய மக்கள் புலியகுளம் விநாயகரிடம் மனு அளிக்க நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.



இதில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று அன்னூரில் இருந்து புலியகுளம் விநாயகர் கோவில் வரை நடைபயணமாக வந்து கொண்டுள்ளனர்.

அவர்கள் விநாயகரிடம் அளிக்க உள்ள மனுவில், நிலங்களை கையகப்படுத்துவது குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் மனு அளித்து எந்த பயனும் இல்லாததால், நீங்கள் (விநாயகர்) எங்களை காப்பாற்ற வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...