ராணுவ பயிற்சி விமானத்தில் 2 கி.மீ உயரத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் குதித்து உதகை அரசு கல்லூரி மாணவி சாகசம்..!

டெல்லியில் நடைபெற்ற என்சிசி பயிற்சியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்டு சாகச பட்டியலில் இடம் பிடித்த உதகை அரசு கலைக் கல்லூரி மாணவி கோகிலவாணிக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.



நீலகிரி: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோகிலவாணி. இவர் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு கல்லூரியில் இளங்கலை சுற்றுலாவியல் துறையில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்நிலையில் என்.சி.சி எனப்படும் தேசிய மாணவர் படையில் தீவிர நாட்டம் கொண்ட இவர், பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பாரா கேம்ப பயிற்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் பங்கேற்றனர்.



அதில் தமிழ்நாடு சார்பாக கோகிலவாணி மட்டும் தேர்வாகி இந்தியா விமான படையின் பிரத்யேக விமானத்தில் பயணித்து 2 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து பாராசூட் உதவியுடன் குதித்து சாகசப் பட்டியலில் இடம் பிடித்தார்.

மாணவி கோகிலவாணியின் பாராசூட் சாகசம் குறித்து தேசிய மாணவர் படை அலுவலர்கள் கூறியதாவது, உதகை அரசு கலை கல்லூரி வரலாற்றிலேயே முதன்முறையாக மாணவி ஒருவர் பாரா கேம்ப் பயிற்சியில் பங்கேற்றிருக்கிறார். இந்த முறை தமிழகத்தில் இருந்து தேர்வான ஒரே பெண் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

அதற்கான உடல் தேர்வில் கோகிலவாணி தேர்ச்சி பெற்றிருந்தார். கடுமையான பல கட்ட பயிற்சிக்குப் பின்னர் அவர், பாரா கேம்ப் பயிற்சிக்கு தேர்வானார்.

கர்னல் ஸ்ரீனிவாஸின் ஊக்கத்தால் என்.சி.சி மாணவிகளுடன் பாராசூட் சாகசத்தில் அவர் வெற்றிகரமாக ஈடுபட்டார்.

இவ்வாறு என்.சி.சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

சாகசத்தில் ஈடுபட்ட மாணவிக்கு, கல்லூரி பேராசியரியர்கள், மாணவர்கள் என பல்வேறு தர்ப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...