கோவையில் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 10 சவரன் கொள்ளை - மர்ம பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக ஈரோட்டில் இருந்து கோவைக்கு வந்த பெண்ணிடம் இருந்த 10 சவரன் நகையை மற்றொரு பெண் திருடிச்சென்றதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


கோவை: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் யுக மூர்த்தி. இவரது மனைவி ஜெயகீதா கோவையில் உள்ள அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

இதற்காக அவர் சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு வந்த பேருந்தில் பயணித்துள்ளார். உடன் தனது மகளையும் அவர் அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் செல்வபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று உடமைகளை சோதனை செய்துள்ளார்.

அப்போது அவரிடம் இருந்த 10 சவரன் நகை காணாமல் போனது தெரியவந்தது. இதுதொடர்பாக உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தாங்கள் வந்த பேருந்தில் தங்களது இருக்கையில் மற்றொரு பெண் அமர்ந்திருந்ததாகவும், அவர் அன்னூரில் இறங்கியதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

அந்த பெண் தங்களது பையை நோட்டமிட்டதாகவும், அவரே நகையை திருடி சென்றிருக்கலாம் எனவும் ஜெயகீதா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செல்வபுரம் போலீஸார் பேருந்தில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 10 சவரன் நகையை மற்றொரு பெண் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...