பொங்கல் போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா பேரவையினர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு

தமிழகத்தில் பதிவு பெற்றுள்ள 40 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கும் பொங்கல் போனசாக ரூ.7,000 வழங்கவும், ஆண் குழந்தைகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.



கோவை: தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா பேரவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை வழங்கி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா பேரவையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா பேரவையின் சார்பில், தமிழ்நாட்டில் பதிவு பெற்றுள்ள 40 லட்சம் தொழிலாளர்களுக்கும் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 7000 ரூபாயை போனசாக வழங்க வேண்டும்.

வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 4 லட்சம் ரூபாயை பெறும் வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும். தொழிலாளர்களின் ஆண் குழந்தைகளுக்கும் 10,11,12 ம் வகுப்புகளுக்கான உதவித்தொகையை வழங்கிட வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



இந்த கோரிக்கை மனுவானது HMS பேரவையின் துணைத் தலைவரும், மாவட்ட கண்காணிப்பு குழுவின் உறுப்பினருமான மனோகரன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.

மனுவை அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், உடனடியாக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...