பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படாது - திருப்பூரில் அமைச்சர் செஞ்சி மஸ்தான்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு முறையாக நிறைவு செய்ய அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படுமே தவிர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படாது என்றார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.



இதில் மாநில செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாவட்ட ஆட்சியர் வினீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இதில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



இதனையடுத்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு வீடு கட்டும் திட்டம் குறித்து அவிநாசியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாதந்தோறும் அவர்களுக்கான உதவித்தொகை முறையாக வருகிறதா என்பது குறித்தும் கேட்டறியப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலையாளிகள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற விவகாரம் என்பது வேறு இலங்கையிலிருந்து தமிழகத்தை நம்பி வந்தவர்களுக்காக கலைஞர் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்து அவர்களுக்கான உதவி செய்து வருவது என்பது வேறு.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள மாணவர்களுக்காக பொறியியல் மற்றும் வேளாண்மை கல்லூரிகளில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்தும் அவர்களுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு ஆதரவு மற்றும் முழு செலவையும் ஏற்றுக் கொள்வது என்பதை தெரியப்படுத்தப்பட்டு உள்ளது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு நிறைவு பெறாத பட்சத்தில் அவற்றை முறையாக நிறைவு செய்ய அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படுமே தவிர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படாது எனவும் அவ்வாறு எங்கேனும் மறுக்கப்பட்டால் உடனடியாக கவனத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...