வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் வருகை...!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் ஆய்வு செய்த முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வந்துள்ள இந்திய முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகானுக்கு, ராணுவ கல்லூரி கமாண்டண்ட் வீரேந்திர வார்ஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள் வரவேற்றார்.



முன்னதாக, கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வெலிங்டன் வந்த அவர், ராணுவ கல்லூரியை பார்வையிட்டு, கல்லூரியின் செயல்பாடுகள் மற்றும் மேம்பாடு பணிகள் குறித்து சமந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



பின்னர், ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் பேசுகையில், இந்திய பாதுகாப்பு துறையின் பலம் மற்றும் மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப நமது படைகளை தயார்படுத்துவது குறித்தும், அதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றியும் விளக்கினார்.



மேலும் முப்படைகளிலும் தேசிய பாதுகாப்பில் மேற்கொண்டு வரும் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...