கோவை சுந்தராபுரத்தில் பரதநாட்டிய பள்ளியில் சாமி சிலைகளை திருட்டு - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

நடன பள்ளியில் இருந்த நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, நந்தி சிலை, விநாயகர் சிலை, யானை சிலை, இரண்டு குத்து விளக்குகளை மர்ம நபர்கள் எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: சுந்தராபுரம் செங்கப்ப கோனார் வீதியைச் சேர்ந்தவர் முரளி (வயது 50). இவர் அதே பகுதியில், கடந்த 20 ஆண்டுகளாக பரத நாட்டிய பள்ளி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மாணவர்களுக்கு நடன பயிற்சி முடிந்ததும் பரத நாட்டிய பள்ளியை பூட்டிவிட்டு முரளி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நடன பள்ளிக்கு முரளி செல்லவில்லை.

இன்று காலை வழக்கம்போல நடன பள்ளிக்கு வந்த போது, நடனப் பள்ளியின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து முரளி அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அவர் உள்ளே சென்று பார்த்தபோது நடன பள்ளியில் இருந்த நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, நந்தி சிலை, விநாயகர் சிலை, யானை சிலை, இரண்டு குத்து விளக்குகள் காணாமல் போய் இருந்தது.

சாமி சிலைகள், குத்து விளக்குகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்ததையடுத்து, திருட்டு குறித்து முரளி, குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார், தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.

மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, 2 மர்ம நபர்கள் பையில் வைத்து சிலைகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...