உலக மண் தினம்: ஈஷாவின் 'மண் காப்போம்' இயக்கம் சார்பில் கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக மண்‌ தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷாவின் ஆதியோகி சிலை முன்பு மண்‌ காப்போம்‌ இயக்கம்‌ சார்பில்‌ நிலத்தை பாதுகாப்பது குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


கோவை: உலக மண்‌ தினத்தை முன்னிட்டு 'மண்‌ காப்போம்‌' இயக்கம்‌ சார்பில்‌ கோவையில் உள்ள ஈஷா அமைப்பின் ஆதியோகி சிலை முன்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (டிசம்பர்‌ 5) நடைபெற்றது. இவ்விழாவில்‌ ஏராளமான தன்னார்வலர்கள்‌ கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும்‌, ஸ்டிக்கர்கள்‌ மற்றும்‌ துண்டு பிரசுரங்களை விநியோகித்தும்‌ பொதுமக்களிடம்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தினர்‌.



இது தவிர கோவையை சுற்றியுள்ள பகுதிகளான பொள்ளாச்சியில்‌ லஷ்மி ஜூவல்லரி, பழமுதிர்‌ நிலையம்‌, திஷா ஸ்கூல்‌ உள்ளிட்ட இடங்களிலும்‌, உடுமலைபேட்டையில்‌ நகைக்கடை வீதி, நேதாஜி மைதானம்‌, அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும்‌ பல்வேறு நிகழ்ச்சிகள்‌ நடைபெற்றன.

மண்‌ணை காப்பதன்‌ அவசியத்தை உணர்த்தும்‌ விதமாக தன்னார்வலர்கள்‌ இலவச மரக்கன்றுகள்‌ வழங்கியும்‌, துண்டுப்பிரசுரம்‌, ஸ்டிக்கர்‌ விநியோகித்தும்‌ மக்களுக்கு மண்‌ வளம்‌ காக்கப்பட வேண்டிய அவசியம்‌ குறித்து விளக்கினர்‌.

இது தொடர்பாக தன்னார்வலர்கள்‌ கூறியதாவது, உலகளவில்‌ மண்‌ வளம்‌ மிக வேகமாக குறைந்து வருகிறது.

உலகளவில்‌ சுமார்‌ 52 சதவதம்‌ விவசாய நிலம்‌ வளம்‌ இழந்துவிட்டதாக ஐ.நா அமைப்பு கூறுகிறது. மண்ணில்‌ குறைந்தபட்சம்‌ 3 சதவீதம்‌ கரிம சத்து இருந்தால்‌ தான்‌ அதை மண்‌ என்றே அழைக்க முடியும்‌ என விஞ்ஞானிகள்‌ கூறுகிறார்கள்‌.

ஆனால்‌, இந்தியாவில்‌ 63 சதவீத விவசாய நிலங்களில்‌ கரிம சத்தின்‌ அளவு 0.5க்கும்‌ குறைவாக உள்ளது. இந்நிலை இப்படியே தொடர்ந்தால்‌, உணவு பற்றாகுறை, தண்ணீர்‌ பஞ்சம்‌, உள்நாட்டு கலவரம்‌ என பல அபாயகரமான பிரச்சிகனைகள்‌ ஏற்படும்‌.

இதை தடுக்கவும்‌, மண்‌ வளப்‌ பாதுகாப்பு குறித்த சட்டங்கள்‌ மற்றும்‌ கொள்கைகளை உருவாக்க வலியுறுத்தி சத்குரு அவர்கள்‌ மண காப்போம்‌ இயக்கத்தை இந்தாண்டு தொடங்கினார்‌. இதற்காக அவர்‌ மார்ச்‌ 21-ம்‌ தேதி முதல்‌ 100 நாட்களில்‌ 27 நாடுகளுக்கு மோட்டார்‌ சைக்கிளில்‌ சவாலான பயணம்‌ மேற்கொண்டு உலகளவில்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தினார்‌.

இதன்‌ விளைவாக, 74 நாடுகள்‌, 11 இந்திய மாநிலங்கள்‌, 9 ஜ.நா அமைப்புகள்‌ இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளித்தன. மேலும்‌, இதுவரை 391 கோடி மக்களும்‌ இவ்வியக்கத்திற்காக குரல்‌ கொடுத்துள்ளனர்‌.

அனைத்து விவசாய நிலங்களிலும்‌ குறைந்தபட்சம்‌ 3 முதல்‌ 6 சதவீதம்‌ கரிம சத்து இருக்க வேண்டும்‌. அதற்காக செயல்‌ செய்யும்‌ விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகை வழங்க வேண்டும்‌.

மர விவசாயம்‌ செய்யும்‌ விவசாயிகளுக்கு கார்பன்‌ கிரெடிட்‌ என்ற பெயரில்‌ மானியம்‌ வழங்க வேண்டும்‌. 3 சதவீதற்கும்‌ மேல்‌ கரிம சத்து கொண்ட மண்ணில்‌ விளையும்‌ விளைப்‌ பொருட்களுக்கு கூடுதல்‌ விலை வழங்க வேண்டும்‌ என்பது இவ்வியக்கத்தின்‌ பிரதான பரிந்துரைகள்‌ ஆகும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், உலக மண்‌ தினமான இன்று (டிச.5) தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும்‌ 1000க்கும் மேற்பட்ட இடங்களில்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இவ்வியக்கத்தின்‌ தன்னார்வலர்கள்‌ நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...