கோவை எட்டிமடையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி தனியார் கல்லூரி ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்..!

எட்டிமடை அருகே கடந்த 2ஆம் தேதி, சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பின் தலையில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த தனியார் கல்லூரி சமையல் ஊழியர் சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.


கோவை: கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (56). இவர் எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சமையல் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (02.12.2022) அதே கல்லூரியில் ஓட்டுநராக பணியாற்றி வரும் அஜித்குமார் என்ற இளைஞருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எட்டிமடை பொங்கேகவுண்டன்புதூர் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், அதே கல்லூரியில் பணியாற்றும் சாய்தரன் என்ற இளைஞர் வந்த மிதிவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மூவரும் கீழே விழுந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த சுப்பிரமணியனுக்கு பின் தலையில் பலத்த காயமடைந்து மயங்கியதாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுப்பிரமணியன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...