கோவை பாலத்துறையில் டிப்பர் லாரி மோதியதில் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த பள்ளிச் சிறுமி படுகாயம்..!

பாலத்துறையில் சாலை அருகே விளையாடிக்கொண்டிருந்த பள்ளிச் சிறுமியின் டிப்பர் லாரி ஏறியதில் காலில் காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், லாரி ஓட்டுனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் பாலத்துறை அடுத்த கருஞ்சாமி கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலித்தொழிலாளியான இவரது மகள் கனிஷ்கா (12) பச்சாபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் சிறுமி சக குழந்தைகளுடன் பாலத்துறை - பச்சாபாளையம் சாலை அருகே கில்லி விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது சாலை அருகே சென்ற குச்சியை எடுக்க கனிஷ்கா சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக சென்ற டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சிறுமியின் இரண்டு கால் பாதத்தின் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மருத்துவர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே வேகமாக டிப்பர் லாரியை ஓட்டி வந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் மீது மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் மீது லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...