கோவை லாலி ரோடு சிக்னல் அருகே குடிநீர் பதிக்க தோண்டப்பட்ட குழியில் அரசு பேருந்து சிக்கியது

சாலையில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி சரிவர மூடப்படாததால் அரசு பேருந்தின் சக்கரங்கள் குழியில் சிக்கியது. பேருந்தில் இருந்து அனைத்து பயணிகளும் இறக்கி விடப்பட்டுள்ள நிலையில், பேருந்தை குழியில் இருந்து மீட்க போக்குவரத்து துறை ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை தடாகம் சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்ட நிலையில், அவை சரிவர மூடப்படாததால் அரசு பேருந்து சக்கரம் சிக்கியது.



பேருந்தில் இருந்து அனைத்து பயணிகளும் இறக்கி விடப்பட்டுள்ள நிலையில், பேருந்தை குழியில் இருந்து மீட்க போக்குவரத்து துறை ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.



இதே போல, அந்த வழியாக வந்த வேன் உட்பட சில வாகனங்களும் அடுத்தடுத்து அந்த குழியில் சிக்கிக்கொண்டது. அவற்றை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.

இந்த சாலையில், குடிநீர் குழாய் அமைக்க குழிகள் தோண்டப்பட்டு சரி வர மூடப்படாததால், அடிக்கடி இவ்வாறு வாகனங்கள் சிக்கி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், குழாய்கள் பதிப்பதற்காக மற்றும் இதர பணிகளுக்காக சாலைகளில் தோண்டப்படும் குழிகள் தரமான முறையில் மூடப்பட்டுள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...