கோவை வெள்ளலூரில் ஆன்லைன் முதலீட்டு மோசடியில் சிக்கி ரூ.7 லட்சத்தை இழந்த ஐடி ஊழியர்..!

வெள்ளலூரை சேர்ந்த நிஷாந்த் என்ற ஐடி ஊழியரிடம் ஆன்லைன் முதலீட்டில் அதிக பணம் கிடைக்கும் என நம்பவைத்து ரூ.7 லட்சத்தை முதலீடு செய்ய வைத்து நூதன கொள்ளையில் ஈடுபட்ட மோசடி கும்பலுக்கு சைபர் கிரைம் போலீசார் வலைவீச்சு.


கோவை: கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த். மென்பொருள் பொறியாளரான இவர், பணி நேரம் கடந்து மற்ற நேரங்களில் பகுதி நேர வேலை (Part time job) செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது அலைபேசியில் குறுந்தகவல் மூலம் ஒரு லிங்க் வந்துள்ளது. அதை கிளிக் செய்து இணையதளம் உள்ளே சென்று இருக்கிறார். அதில் ஆன்லைனில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறக்கூடிய ஆன்லைன் இன்வெஸ்ட்மென்ட் குறித்தான தகவல்களை ஐடி பணியாளரான நிஷாந்திடம் தெரிவித்திருக்கின்றனர்.

பிரபலமான இ-காமர்ஸ் வணிக தளத்தில் விற்பனையாகும் பொருட்களை வாங்கி அதே இணையதளத்தில் வேறு ஒருவருக்கு விற்பது போன்ற நகர்வை அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் முதல் அவனை தவணையாக 600 ரூபாயை இ-காமர்ஸ் இணையதளத்தில் முதலீடு செய்துள்ளார்.

இதில் அவருக்கு 400 ரூபாய் லாபத்துடன் ஆயிரம் ரூபாயாக பணம் திருப்பி தரப்பட்டுள்ளது. இந்த நிலையில் 600 ரூபாய் முதலீட்டுக்கு 400 ரூபாய் லாபம் கிடைத்த நிலையில் லட்சக்கணக்கில் முதலீடு செய்ய நிஷாந்த் திட்டமிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் முதல் தவணையாக 5 லட்சம் ரூபாயை மொத்தமாக முதலீடு செய்துள்ளார். இதையடுத்து தனது நண்பர்களிடமிருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை கடனாக பெற்று மொத்தமாக 7 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் முதலீடு செய்யப்பட்ட பணத்துக்கு எதிர் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லாத நிலையில், லாபமும், முதலீட்டுத் தொகையையும் திரும்ப தரப்படாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக தான் ஏமாற்றப்பட்டதாக சந்தேகம் அடைந்த ஐடி ஊழியர் நிஷாந்த் கோவை நகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நிசாந்திடம் பேசியவர்கள் போலிகள் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து, ஆன்லைனில் முதலீட்டுக்கு ஈர்த்து பணத்தை கொள்ளை அடிக்கும் ஆன்லைன் வழிப்பறி கும்பல் ஐடி பணியாளர் நிஷாந்திடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது. ஆசை காட்டி மோசம் செய்த கதையாக அதிக லாபம் பெறும் நோக்கத்தில் ஆன்லைன் ஆசாமிகள் விரித்த வலையில் சிக்கிக் கொண்ட ஐடி பணியாளரான நிஷாந்த் லட்சக் கணக்கில் ஏமாந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுபோன்ற கவர்ச்சியான விளம்பரங்களை பொதுமக்கள் நம்பி முதலீடு செய்யக்கூடாது எனவும் ஏமாந்தவர்கள் உடனடியாக 1930 என்ற நம்பருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் சைபர் பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...