கோவை கவுண்டம்பாளையம் அருகே சேவல் சண்டை சூதாட்டம் - 8 பேரை கைது செய்த போலீசார்..!

கவுண்டம்பாளையம் அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.10,700 பணம் மற்றும் 2 கட்டு சேவல்களை பறிமுதல் செய்த நிலையில், 8 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகேயுள்ள மாரியம்மன் கோவில் வீதி பகுதியில் சிலர் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபடுவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன், உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவேல் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடைபெறுவது தெரியவந்தது.

இதனையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்டு வந்த வடவள்ளியைச் சேர்ந்த சிவானந்தன், மணிகண்டன், செந்தில்குமார், பாபு, ரத்தினபுரியைச் சேர்ந்த கனகராஜ், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ராஜா, செல்வக்குமார் மற்றும் நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பிரவீன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 10,700 ரூபாய் பணம் மற்றும் 2 கட்டு சேவல்களை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 8 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...