கோவை கருமத்தம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் நண்பர்கள் பலியான சோகம்..!

கருமத்தம்பட்டி அருகே பைக் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட விக்னேஷ்(23) சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், சோமசுந்தரம்(22) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.


கோவை: கோவை மோப்பிரிபாளையம் பகுதியை சேர்ந்த கதிரேசன் மகன் சோமசுந்தரம் (22) மற்றும் மணிவேல் மகன் விக்னேஷ் (23) ஆகியோர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் கணியூர் நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்றுள்ளனர்.

அப்போது பின்னால் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சோமசுந்தரம் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்தனர். இந்த கோர விபத்தில் சிக்கிய விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சோமசுந்தரத்தை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சோமசுந்தரம் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு காரை ஓட்டி வந்த கௌதம் என்ற இளைஞரிடம் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் சென்ற நண்பர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...