கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் மேயர் திடீர் ஆய்வு - அனுமதியின்றி வைத்திருந்த மாட்டு பண்ணையை காலி செய்ய உத்தரவு….!

மாநகராட்சியின் அனுமதி பெறாமல் வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் இருந்த மாட்டுப் பண்ணையை உடனடியாக காலி செய்ய உத்தரவு பிறப்பித்த மேயர் கல்பனா ஆனந்தகுமார், இது குறித்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.



கோவை: கோவை வெள்ளலூரில் இயங்கி வரும் குப்பை கிடங்கில், மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் தினம்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் காலியாக உள்ள இடங்களில் அனுமதி இன்றி மாட்டுப்பண்ணை வைத்து நடத்தி வந்துள்ளனர். இது அதிகாரிகளுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், அனுமதியின்றி நடத்தப்படும் மாட்டுப் பண்ணை கவுன்சிலர்களின் உதவியுடன் நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதேபோல, அனுமதி இன்றி சில குழுவினரும் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை பொறுக்கி வருவதாகவும் புகார் எழுந்தது.



தொடர் புகார்கள் காரணமாக, வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்திற்கு கடந்த 1 ஆம் தேதி மாநகராட்சி மேயர் கல்பனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வை தொடர்ந்து மேயர், அங்கு நடைபெற்று வரும் அத்துமீறல்கள் குறித்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.



மாநகராட்சியில் எந்த டெண்டரும் எடுக்காமல் எப்படி மாட்டு பண்ணை செயல்பட்டு வருகிறது என கேள்வி எழுப்பிய மேயர், வரும் ஜன.1 ஆம் தேதிக்குள் அனைத்தையும் காலி செய்து விட வேண்டும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் மற்றும் மாட்டுப் பண்ணை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குப்பைகளை தரம் பிரித்தல், குப்பையை எருவாக மாற்றுதல், சுற்றுச் சூழல் பாதிப்பு, அப்பகுதி வாசிகளின் எதிர்ப்பு என பல ஆண்டுகளாக வெள்ளலூர் குப்பை கிடங்கை பராமரிப்பில் பெரும் சவாலை சந்தித்து கோவை மாநகராட்சிக்கு, குப்பை கிடங்கில் உள்ள மொத்த குப்பைகளையும் இன்னும் 15 மாதங்களுக்குள் அகற்ற ஏற்கனவே பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...