கோவையில் அழகு நிலைய ஊழியர் கொலையில் கைதான மேலும் ஒரு நபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது - ஆட்சியர் நடவடிக்கை

கிராஸ்கட் ரோட்டில் உள்ள அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்த பிரபு என்பவரை 12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த வழக்கில், ஏற்கனவே மூன்று குற்றவாளிகளில் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், மற்றொரு குற்றவாளியான கார்த்திக் என்பவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.


கோவை: ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி சேர்ந்தவர் பிரபு (வயது 39). இவர் கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள அழகு நிலையத்தில் ஊழியராக வேலை செய்தார். இவர், சரவணம்பட்டியில் உள்ள அழகு நிலையம் நடத்திவரும் கவிதா என்பவரின் வீட்டில் தங்கி இருந்தார்.

கவிதாவும், பிரபுவும் நெருங்கி பழகி வந்த நிலையில், கவிதாவுக்கு, திவாகர், கார்த்திக் ஆகிய வாலிபர்களுடனும் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. எனவே, இது தொடர்பாக பிரபுவுக்கும், கவிதாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அப்போது, பிரபு ஆபாச படங்களை வெளியிடுவேன் என்று கூறி கவிதாவை மிரட்டி உள்ளார். இதனால் பிரபுவை கொலை செய்ய திட்டமிட்ட கவிதா, கடந்த செப்டம்பர் மாதம் 14-ம் தேதி திவாகர், கார்த்திக் என தனது ஆன நண்பர்களுடன் சேர்ந்து பிரபுவை கொலை செய்ததுடன், உடலை 12 துண்டுகளாக வெட்டி குப்பைத்தொட்டி, கிணறு என பல்வேறு இடங்களில் வீசி சென்றனர்.

பின்னர், தீவிர விசாரணையில் கொலை வழக்கு தொடர்பாக கவிதா, திவாகர், கார்த்திக், ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், கைதான திவாகர் ஏற்கனவே பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு இருந்ததால், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திவாகர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதுபோல கார்த்திக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு வந்ததால் அவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பரிந்துரை செய்தார்.

மாவட்ட கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மற்றொரு குற்றவாளியான கார்த்திகை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். உத்தரவின் பேரில், போலீசார் கார்த்திக்கை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளனர்.

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணை நகலும் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...