நீலகிரி உதகை அருகே 2 ஆண்டுகளுக்கு பின் தீபத்திருவிழாவை உற்சாகமாக கொண்டாடிய படுகர் இன மக்கள்..!

ஊதகை அடுத்த நஞ்சநாடு கிராமத்தில் கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்ட நிலையில், படுகர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அதில் மிகப்பெரிய கிராமமாக உள்ளது உதகை அடுத்த நஞ்சநாடு கிராமம்.

இந்த கிராமத்தில், ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் திருவண்ணாமலை தீபத்திற்கு அடுத்தபடியாக “லக்கிஷா ஹப்பா” எனப்படும் கார்த்திகை தீபத் திருவிழா நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு கிராமத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



இதில் சுமார் 1000க்கும் மேற்பட்ட படுகர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டு நடனமாடி தீபத்திருவிழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.



முன்னதாக “தொட்ட மனெ” எனப்படும் மூதாதையர்களின் இல்லத்தில் இருந்து பந்தம் எடுத்து வந்து குடியிருப்பு அருகே உள்ள கொடி மரத்தில் தீபம் ஏற்றப்பட்டது.



பின்னர் இளைஞர்கள் நடனமாடி ஊர் பெரியவர்கள் மற்றும் பூசாரியை அழைத்து வந்து ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கூடி இருந்த இடத்தில் சிறப்பு பூஜை செய்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கொடி மரத்தில் வைக்கப்பட்ட தீச்சட்டியில் தீபம் ஏற்றப்பட்டது.

அப்போது கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்களுடன் படுகர் இன மக்கள் தீபத் திருவிழாவில் பங்கேற்று வழிபாடு செய்தனர்.



இந்த தீபத் திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாரம்பரிய உடையணிந்து நடனமாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...