சூலூர் பாப்பம்பட்டி பிரிவு அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 1.5 டன் குட்கா பறிமுதல் - 4 பேர் கைது

தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு அருகே உள்ள தனியார் குடோனில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 1.5 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: குட்கா மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு அருகே உள்ள தனியார் குடோனில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 1.5 டன் குட்கா பொருட்கள் கண்டுபிடிப்பட்டது.

இதையடுத்து வெளி மாநிலத்தில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுதாகரன் (43), குருநாதன் எத்திராஜ் (50), செல்வகுமார் (47), சிவக்குமார் (38) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...