கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..!

மதுக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் மலைக்கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு ஏற்றப்பட்ட மகா தீபத்தை ஏராளமான பக்தர்கள் வணங்கி வழிபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மகா தீப வழிபாடு நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கால ஊரடங்கின் காரணமாக அரசு விதிமுறைப்படி பக்தர்கள் இல்லாமல் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுபாடுகளின்றி வழக்கமான முறையில் தர்மலிங்கேஷ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.



முன்னதாக கோவில் நிர்வாகிகள் பக்தர்களுடன் கோயிலை வலம் வந்து, நந்தி தேவனுக்கு முன் உள்ள கம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அடிவார பகுதியில் உள்ள விநாயகர், இந்திரலிங்கம், அக்னிலிங்கம், நாக அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் தீபம் ஏற்றப்பட்டது.

இறுதியாக, அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.



இந்த விழாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மகா தீபத்தை வணங்கி வழிபட்டனர். தொடர்ச்சியாக வரும் டிசம்பர் 8ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மூன்றாம் நாள் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 3 நாட்கள் தொடர்ந்து மலை உச்சியில் தீபம் எரிவதற்கு பசு நெய்யை கோவிலுக்கு பக்தர்கள் வழங்கி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...