கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 3 பேர் கைது - என்.ஐ.ஏ அதிகாரிகள் நடவடிக்கை

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் குன்னூரை சேர்ந்த உமர் பாரூக், கோவையை சேர்ந்த தவ்ஃபிக், பெரோஸ் கான் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.


கோவை: கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி, கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாநகர போலீசாருடன் இணைந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஜமீஷா முபீனுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

இந்த சோதனையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் குன்னூரை சேர்ந்த உமர் பரூக் (39), கோவையை சேர்ந்த தவுபிக்(25) மற்றும் பெரோஸ் கான் (28) ஆகிய மூன்று பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கோவை கார் வெடிப்பு வழக்கில், உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதின், கோவை ஜி.எம் நகர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அப்சர் என ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...