நீலகிரி குன்னூர் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆய்வு

நீலகிரி குன்னூர் பகுதியில் ரூ.29.05 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் ரூ.89.82 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆய்வு மேற்கொண்டார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை துறையின் மூலம் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்கள் மக்களின் தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



அதனடிப்படையில் குன்னூர் ஊராட்சி ஒன்றியம், உபதலை ஊராட்சி, சின்ன பிக்கட்டி பகுதியில், தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டில் முடிவடைந்துள்ள சாலை பணிகளை ஆட்சியர் அம்ரித் நேரில் ஆய்வு செய்தார்.



இதனையடுத்து, பாறை குழி பகுதியில், நுண் உரம் மைய திட்டத்தின் கீழ், ரூ.27.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில், நுண்ணுயிர் உரம் மையத்தில், பணியாளர்கள் மூலம் உரம் தயாரிக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆய்வு செய்தார்.

இதனையடுத்து மகரிமரா ஹட்டி பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16.07 லட்சம் மதிப்பீட்டில புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் என மொத்தம் ரூ.89.82 லட்சம் மதிப்பீட்டில், முடிவுற்ற பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



தொடர்ந்து, பெரிய உபதலை பகுதியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.3.00 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.

மேலும் பாறைகுழி பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.05 லட்சம் மதிப்பீட்டில், தோட்டகலை நர்சரியில் பணியாளர்கள் மூலம் எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா, திராட்சை, சித்தா, மாதுளை போன்ற செடிகள் உற்பத்தி செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், உபதலை ஊராட்சி, பழத்தோட்டம் பகுதியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிட பணி உள்பட மொத்தம் ரூ.29.05 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் இந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து, பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, மகளிர் திட்ட இயக்குநர் பாலகணேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுஜாதா, குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெய்சங்கர், மோகன் குமாரமங்கலம், உபதலை ஊராட்சித்தலைவர் பாக்கியலட்சுமி சிதம்பரம், உதவி செயற்பொறியாளர்கள் உட்பட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...