கோவை காந்திபுரத்தில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் புகார்களை பதிவு செய்ய போலீசார் அழைப்பு

காந்திபுரம் 100 அடி சாலை, 3வது வீதியில் இயங்கி வந்த முத்து லேண்ட் டெவலப்பர்ஸ், முத்துவிலாஸ் சிட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார்களை நேரடியாக வந்து பதிவு செய்ய கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு.


கோவை: கோவை காந்திபுரம் 100 அடி சாலை, 3வது வீதியில் முத்து லேண்ட் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், முத்துவிலாஸ் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட், நெல்லை முத்து விலாஸ் ஸ்வீட்ஸ் & குருப்ஸ் மற்றும் தங்க நகை சிறுசேமிப்பு திட்டம் ஆகிய நிறுவனங்கள் இயங்கி வந்தன.

இந்த நிறுவனங்கள் மீதும், அதன் இயக்குநர் பரமசிவம் (49) மற்றும் D.கிருத்திகா ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் பரமசிவம் (49) என்பவர் கடந்த 2019 ம் ஆண்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதுவரை இந்த நிறுவனங்கள் மீது 2,026 புகார் மனுக்கள் பெறப்பட்டு குற்றப்பத்திரிக்கை மற்றும் கூடுதல் குற்றப்பத்திரிகை கோயம்புத்தூர் டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேற்படி நிறுவனங்களில் முதலீடு செய்து பணம் திரும்ப கிடைக்காமல் ஏமாற்றப்பட்டவர்கள், கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் தங்களுடைய அசல் ஆவணங்களுடன் நேரில் வந்து புகார் மனுவை அளிக்குமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...