திருப்பூர் கொண்டத்து காளியம்மன் கோவிலுக்கு போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது‌

பெருமாநல்லூரில் உள்ள கொண்டத்து காளியம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அப்பியாபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் உள்ள கொண்டத்து காளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.



இந்நிலையில் இந்த கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், வெடித்து சிதறும் வாய்ப்பு உள்ளதால் பயமாக உள்ளது என மர்ம நபர் ஒருவர் தமிழக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கும், கேரள மாநில காவல் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலையடுத்து உடனடியாக கோவிலில் இருந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டு சோதனை செய்ததில் வெடிகுண்டு தகவல் வெறும் மிரட்டல் என தெரியவந்தது. இந்நிலையில், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த எண்ணை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் அந்த நபர், பெருமாநல்லூர் அடுத்த அப்பியாபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (47) என்பது தெரியவந்தது. இந்நிலையில் அவர்‌ மது போதையில் வேண்டுமென்றே இதுபோன்று வெடிகுண்டு புரளி கிளப்பியதும் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தி மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க பொய்யான தகவலை சொன்ன கார்த்திகேயனை பெருமாநல்லூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கொண்டத்து காளியம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெருமாநல்லூர் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...