கூடலூரில் அட்டகாசம் செய்து வந்த PM 2 மக்னா யானை பிடிபட்டது - மக்கள் நிம்மதி..!‌

18 நாட்களாக வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டி வந்த யானை ஒரு வழியாக இன்று பிடிபட்டதையடுத்து அப்பகுதி மக்களை நிம்மதி அடைந்துள்ளனர். இப்படிப்பட்ட யானை முதுமலை அடர் வனப் பகுதிக்குள் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா, புளியம்பரை, வாழவயல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து வீடுகளை மற்றும் மனிதர்களை தாக்கி வந்த பிரச்னைக்குரிய PM 2 மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

கடந்த 19ஆம் தேதி வாழவயல் பகுதியில் குடியிருப்பு சேதப்படுத்தி பாப்பாத்தி இன்று மூதாட்டியை PM2 மக்னா யானை கொன்றதையடுத்து, அந்த யானையை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. சாலை மறியல், ஆட்சியரிடம் மனு என்று பலகட்ட போராட்டங்களை முன் எடுத்த கூடலூர் மக்களின் கோரிக்கைக்கு சேவு சாய்த்த தமிழக அரசு, யானையை பிடிக்க உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, 21ஆம் தேதி முதல் 50 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் PM 2 மக்னா யானையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ட்ரோன், கண்காணிப்பு கேமராக்கள் என பல்வேறு முயற்சிகளை வனத்துறையினர் பயன்படுத்தி வந்த போதும், இரவு நேரங்களில் கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள புளியம்பாறை, வாட்சிக்கொள்ளி, தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சேதப்படுத்தியும், பகல் நேரங்களில் அடர்ந்த வனப் பகுதிக்குள் PM 2 யானை சென்று வந்ததால், யானையை பிடிப்பதில் பெரும் சிக்கல் நீடித்து வந்தது.

கடந்த 18 நாட்களாக தொடர்ந்து PM 2 மக்னா யானை வனத்துறையினருக்கு சிக்காமல் போக்கு காட்டி வந்த நிலையில், நேற்று இரவு தேவாலா வாட்சிக் கொல்லி பகுதியில் குடியிருப்பில் சேதப்படுத்திய யானையை வனத்துறையினர் பின் தொடர்ந்து பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதன்படி, இன்று பிற்பகல் 2 மணி அளவில் மையக்கொல்லி எனும் பகுதியில் இரண்டு மருத்துவர்கள் கும்கி யானைகள் மீது அமர்ந்தவாறு PM 2 யானைக்கு மயக்க ஊசியை செலுத்தினர்.



விஜய், சுஜய், கிருஷ்ணா, வசிம் ஆகிய நான்கு கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடிபட்ட PM 2 யானையை முதுமலை வனப்பகுதிக்கு கொண்டு செல்லும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



கட்டுக்கடங்காமல் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த மக்னா யானையை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்ததால், எந்த நேரமும் யானையால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கூடலூர் பகுதி மக்கள் தற்போது யானை பிடிபட்டது என்ற செய்தியை கேட்டு நிம்மதி அடைந்துள்ளனர்.



மேலும், இரவு பகல் பாராமல், யானையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...