கோவை மாநகராட்சியில் குப்பைகளை எடுத்துச் செல்லும் வாகனம் தயார் - ஆணையாளர் பிரதாப் ஆய்வு….!

தூய்மை இந்தியா திட்டத்தில் கீழ் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு உள்ள குப்பைகளை எடுத்துச் செல்ல 105 வாகனங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.7.82 கோடி ஆகும்.


கோவை: கோவை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை எடுத்துச் செல்ல தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டாடா ஏஸ் வாகனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.7.45 லட்சம் மதிப்பிளான இந்த வாகனத்தின் செயல்பாடு குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் இன்று ஆய்வு மேற்கொண்டார்.



இன்று டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனத்தின் சிறப்பம்சம் குறித்து விரிவாக ஆணையர் கேட்டறிந்தார்.



பின்னர், குப்பைகள் சேகரிக்கும் மற்றும் அதனை வண்டியில் இருந்து அப்புறப்படுத்துவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், தூய்மை இந்தியா திட்டத்தில் கீழ் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு சேர்ந்து 105 வாகனங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.7.82 கோடி ஆகும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...