கூடலூரில் பிடிபட்ட PM2 மக்னா யானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு சீகூர் வனப்பகுதியில் விடுவிப்பு

கும்கி யானைகளின் உதவியுடன் அந்த யானை பாதுகாப்பாக லாரியில் ஏற்றபட்டு இரவோடு இரவாக முதுமலை புலிகள் காப்பக பகுதிக்குட்பட்ட சீகூர் வன பகுதிக்கு உட்பட்ட அசுர மட்டம் வனத்துக்குள் விடுவிக்கப்பட்டது. கூடலூர் அருகே பிடிபட்ட PM2 மக்னா யானைக்கு ரேடியோ காலர் கருவி பொறுத்தபட்டு சீகூர் வன பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பாக விடுவிக்கபட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புளியம்பரை, வாழவயல், தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் PM2 என்ற சுமார் 15 வயது மதிக்கதக்க மக்னா யானை ஒன்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சுற்றித்திரிந்து வந்தது.

பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் சென்று விடும் இந்த யானை இரவு நேரங்களில் வீடு வீடாக சென்று சுவற்றை உடைத்து வீட்டிற்குள் இருக்கும் அரிசி போன்ற உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தது.

இதுவரை இந்த மக்னா யானையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த நிலையில், கடந்த மாதம் வாழவயல் பகுதியில் 52வயது மதிக்கதக்க பாப்பாத்தி என்ற பெண்ணின் வீட்டை தாக்கி அவரையும் கொன்றது.

இதனையடுத்து, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அந்த யானையை பிடித்து முதுமலை வனப்பகுதிக்குள் விட தமிழக வனத்துறை அனுமதி அளித்தது.

அதனைத் தொடர்ந்து 18 நாள் தொடர் முயற்சியின் காரணமாக நேற்று மதியம் புளியம்பரை அருகே உள்ள நீடில் ராக் வனப்பகுதியில் வைத்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

பின்னர், கும்கி யானைகளின் உதவியுடன் அந்த யானை பாதுகாப்பாக லாரியில் ஏற்றபட்டு இரவோடு இரவாக முதுமலை புலிகள் காப்பக பகுதிக்குட்பட்ட சீகூர் வன பகுதிக்கு உட்பட்ட அசுர மட்டம் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், அந்த யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு, அதிகாலையில் பத்திரமாக வனத்துக்குள் விடப்பட்டது. லாரியில் இருந்து கீழே இறங்கிய அந்த யானை நன்றாக புற்களை மேய தொடங்கியதுடன் பிளரியபடி வன பகுதிக்குள் நடந்து சென்றது.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த மக்னா யானையை பத்திரமாக பிடித்து வேறு பகுதியில் உள்ள வனத்துக்குள் விடுத்தவனத்துறையினருக்கு கூடலூர் பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...