உதகையில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - இலவச தலைகவசங்கள் வழங்கப்பட்டது

உதகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் காவல்துறையின் சார்பில் நடத்தபட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இலவச தலைகவசங்கள் வழங்கபட்டது. மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகள் வழங்கி ஊக்குவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகை சேரிங் கிராஸ் பகுதியில், காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 30 நபர்களுக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது.



முன்னதாக, சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கையெழுத்து போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.



பின்னர், சாலை பாதுகாப்பு குறித்து பேசிய ஆட்சியர் S.P.அம்ரித், சாலை பாதுகாப்பு வார விழாவின் நோக்கமே வாகன ஓட்டிகள் விபத்தில்லாமல் வாகனத்தை இயக்க வேண்டும் என்பதே. இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்.

வாகன ஓட்டிகள் பாதுகாப்பான வேகத்திலும், இரவில் எதிரில் வாகனம் வரும் பொது ஒளியை குறைத்து, சாலை சந்திப்பில் வலது புறத்திலிருந்து வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு, முன் செல்லும் வாகனங்களுக்கு போதிய இடைவெளி விட்டும், வளைவு, குறுகிய சாலை, பாலங்கள், மருத்துவமனை, பள்ளிகள் உள்ள இடங்களில் கவனமாக செல்ல வேண்டும்.

மேலும், போக்குவரத்து சிக்னல்களை மதித்து, வாகனம் ஓட்டுவது மிக முக்கியம். வகானகள் இயக்கும் போது, செல்போன் பயன்படுத்தாமலும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிந்தும் வாகனம் ஓட்ட வேண்டும். அவ்வாறு வாகனம் ஓட்டும் பொழுது விபத்துக்களை தவிர்ப்பது மட்டுமல்லாமல் உயிரிழப்புகளையும் தடுக்க முடியும் என்றார்.



இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், திட்ட இயக்குநர் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் டாக்டர் மோனிகா ராணா, டேன் டீ பொது மேலாளர் ஜெயராஜ், வெலிங்டன் பாளையவாரிய முதன்மை செயல் அலுவலர் அலி, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் நவாஸ், உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், உதகை துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன், உதகை வட்டாட்சியர் ராஜசேகரன், உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் காவல் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...