உலகம் போற்றும் சார்லஸ்-டயானா காதல் கதை!


உலகம் போற்றும் காதல் கதைகளை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்து விட முடியாது. அந்தவகையில் இன்று நாம் காண இருப்பது பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ்-க்கும் ஒரு சாதாரண பள்ளி ஆசிரியையான டயானா-வுக்கும் இடையே மலர்ந்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்த காதல் கதை. 

காதலர்கள் கொண்டாடும் நாள் விரைவில் வரவிருக்க, உலகம் போற்றும் காதல் கதைகளையும், உண்மையான காதலர்களின் பேட்டிகளையும் தொடர்களாக தர இருக்கிறது சிம்ப்ளிசிட்டி.

நவம்பர் மாதம் 14-ம தேதி 1948-ம் ஆண்டு லண்டன் மாகாண இளவரசராக பிறந்தவர் சார்லஸ். பொதுவாக அரச குடும்பத்திற்கே உரித்தான பகட்டு சார்லசிடம் குறைவாக காணப்பட்டதன் விளைவே ஒரு சாதாரண குடும்பத்து பெண் மீது இவருக்கு காதல் மலர காரணமாய் அமைந்தது.

பிரான்செஸ் ஸ்பென்சர் என்ற இயற்பெயருடன் பிரிட்டனில் உள்ள சன்றிங்க்ஹெம் என்னும் இடத்தில் கடந்த 1961-ம் ஆண்டு நடுத்தர வர்க்க  குடும்பத்தில் பிறந்தவர் டயனா. முகத்தில் எந்நேரமும் புன்னகை, எளிமை என்று பார்ப்பதற்கு பக்கத்து வீடு பெண் போல இருந்ததாலோ என்னவோ, பிரிட்டிஷ் மக்களிடள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார் இந்த பெண்.

இங்கிலாந்திலுள்ள பள்ளி ஒன்றில் உதவியாளராக பணியாற்றி வந்தார் டயானா. இவரது தந்தை இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் குதிரை பராமரிப்பு வீரராக இருந்தார். அதனால், அக்குடும்பம் ஆண்டாண்டு காலமாக மன்னர் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது. அவ்வப்போது அரச குடும்ப விழாக்கள் நடைபெறும் வேளையில் டயனா தன் குடும்பத்துடன் பங்கேற்பார். அவ்வேளையில் தான் சார்லஸ் – டயனா காதல் மலர்ந்தது.  

தன் குடும்ப விழாக்களில் பங்கேற்கும் அழகு தேவதையான டயனா-வை கண்ட இளவரசர் சார்லஸ், அவர் மீது காதல் கொண்டார்.  1981-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம்  தேதி இளவரசர் சார்லஸ் காதலை டயனாவிடம் வெளிப்படுத்த அக்காதலை டயனா ஏற்றுக்கொண்டார். அதெப்படி! அரச குடும்பத்து வாரிசு ஒரு சாதாரண குடும்பத்து பெண்ணை திருமணம் செய்து கொள்ள அனுமதிப்பது என்று சார்லசின் தாய் ராணி எலிசபத் கேட்க, முரட்டு பிடிவாதம் பிடித்த சார்லஸ் இறுதியில் திருமணத்திற்கு சம்மதம் வாங்கினார்.

இளவரசரின் காதலை அறிந்து கொண்ட ஊடக உலகம் டயனா-வை தேடி படையெடுக்க, பள்ளியினுள் இருந்து பவ்யமாக வெளியே வந்துள்ளார் அவர். ஆஹா.! இளவரசருக்கு ஏற்ற தேவதை என்று முடிவு செய்து கொண்ட காமிராக்கள் அன்றே டயனா-வை முழுவதுமாக உள்வாங்கிக்கொண்டன. அன்று  முதல் டயனா உலகம் முழுவதும் அறியப்பட்ட பிரபலாமான பெண்ணாக மாறினார்.

இளவரசர் மீதான அளவு கடந்த காதல் அவர்கள் 

இருவரையும் 1981-ம் ஆண்டு ஜுலை மாதம் 21-ம் நாளன்று இணைத்து வைத்தது. இவர்களின் திருமண நிகழ்வு உலகம் முழுவதும் பேசப்பட, திருமண நிகழ்வை பி.பி.சி. தொலைக்காட்சி  நேரடியாக ஒளிபரப்பியது. திருமணம் முடிந்த நிலையில், டயனா வேல்ஸ்-இன் இலவரசியானர். இருந்த போதும், எந்த வித பகட்டுமின்றி சமூகத்தில் மக்களுள் மக்களாக அன்யோன்யமாக வலம் வந்த டயனா பிரிட்டிஸ் மக்களிடம் மட்டுமல்லாது, உலக மக்கள் அனைவரிடத்திலும் நீங்காத, தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்துகொண்டார்.

பிரபலங்கள் வாழ்வை சர்ச்சைகள் சூழ்ந்து கொள்வதில் ஆச்சரியபடுவதற்கு இல்லை. அதன்படி, இந்த காதலர்களின் வாழ்வில் பலரும் சர்ச்சைகள் ஏற்படுத்தினாலும் சார்லஸ்- டயனா காதல் கதை வரலாற்றால் அழிக்க முடியாத இடத்தில் அமர்ந்துவிட்டது. 

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...